மலாயா பல்­கலைக்கழ­கத்­துக்கு வருகை­ புரிந்த சிங்கப்­பூர் அதிபர் !

sg.presidentசிங்கப்­பூர் தேசிய பல்­கலைக் கழ­கத்­து­டன் 1905 முதல் வரலாற்றைப் பகிர்ந்து கொண்­டி­ருக்­கும் மலாயா பல்­கலைக்கழ­கத்­துக்கு, சிங்கப்­பூர் அதிபர் டாக்டர் டோனி டான் நேற்று (19.09.2013) வருகை புரிந்­தார். டாக்டர் டான் சிங்கப்­பூர் தேசிய பல்­கலைக்கழ­கத்­தின் புர­வ­லர் என்பது குறிப்­பி­டத்­தக்­கது.

sg president in malaysia1959-ல் மலாயா பல்­கலைக் கழகம் இரண்டு வளாகங்களா­கப் பிரிக்கப்பட்டது. ஒரு வளாகம் கோலா­லம்­பூ­ரி­லும் இன்னொரு வளாகம் சிங்கப்­பூ­ரி­லும் நிறு­வப்­பட்­டது. சிங்கப்­பூர் வளாகம் பின்னர் சிங்கப்பூர் தேசிய பல்­கலைக் கழ­க­மா­னது.

இன்றும் ஆண்­டு­ தோ­றும் நிறைய சிங்கப்­பூர் மாண­வர்­கள் மலாயா பல்கலைக்­க­ழ­கத்­துக்­குச் செல்­கின்ற­னர். பரி­மாற்­றத் திட்­டத்­தி­லும் கலந்து கொள்கின்ற­னர்.

2010-ல் இரண்டு பல்­கலைக்கழ­கங்களை­யும் சேர்ந்த 16 கட்­ட­ட­வி­யல் மாணவர்­கள் ஒரு மாதப் பரி­மாற்­றத் திட்­டத்­தில் கலந்து கொண்ட­னர். தற்போது 121 சிங்கப்­பூர் மாண­வர்­கள் மலாயா பல்­கலைக் கழ­கத்­தில் பயில்கின்ற­னர். அவர்­கள் பெரும்பா­லும் மலாய் மொழி, இஸ்­லா­மி­யக் கல்விப் பிரிவில் உள்ள­னர்.