01. சி.வி விக்னேஸ்வரன் – 132,255
02. அனந்தி சசிதரன் – 87,870
03. தர்மலிங்கம் சித்தார்த்தன் – 39,715 (புளொட் தலைவர்)
04. ஆனோல்ட் – 26,888
05. சி.வி.கே. சிவஞானம் – 26,747
06. கஜதீபன் – 23,669 (தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், புளொட் வேட்பாளரும்)
07. எம்.கே.சிவாஜிலிங்கம் – 22,660
08. ஜங்கரநேசன் – 22,268
09. சுகிர்தன் – 20,541
10. சயந்தன் – 20,179
11. விந்தன் – 16,463
12. பரஞ்சோதி – 16,359
13. சர்வேஸ்வரன் – 14,761
14. சிவயோகன் – 13,479
ஆகிய 14 தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றிவாய்ப்பு குறித்து புளொட் தலைவரும் வேட்பாளருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருப்பதாவது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இத்தேர்தலில் வெற்றியடைவோம் என்பது எமக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. இருந்த போதிலும் அறுதிப் பெரும்பான்மையுடன் நாம் வெற்றியீட்டினால் தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும், இதற்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றும் நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அறுதிப் பெரும்பான்மை வெற்றியீட்டுவதற்காக, தமிழ் மக்கள் “தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு” வாக்களித்த மக்கள் அனைவருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நான் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், வடமாகாண சபையின் சகல மாவட்டங்களிலும் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ள அவர் புளொட் அமைப்புக்கு வவுனியாவில் மட்டும்தான் செல்வாக்கு இருக்கிறது என்ற ஒரு தவறான கருத்து இருக்கின்றது. இக் கருத்தினை முறியடிப்பதற்கு, சகல பிரதேசங்களிலும் நாம் மக்கள் செல்வாக்கோடு தான் இருக்கின்றோம் என்பதற்காகவே நான் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டேன்” என தெரிவித்தார்.
|