தெற்காசிய ஊரக போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் லாரி டிரைவரின் மகன். குவியும் பாராட்டுகள்.

தெற்கு ஆசிய ஊரக விளையாட்டு போட்டிகளில் இந்தியா, வங்காளதேசம், பூட்டான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையே ஹாக்கி போட்டி கடந்த 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைப்பெற்றது.

இந்திய நாட்டின் சார்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அணிக்காக சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த தேவனேசன் மகன் கோபிநாத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

இந்த அணி தகுதி ஆட்டங்களில் வெற்றிப்பெற்று தனது இறுதி போட்டியில் பூட்டான் அணியுடன் விளையாடியது. இந்த போட்டியில் இந்தியா அணி 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்றனர்.

லாரி டிரைவரின் மகனாக இருந்து சாதனை படைத்துள்ள கோபிநாத் நேற்று முன்தினம் ஏற்காடு திரும்பியதும் பல்வேறு தரப்பினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் ஏற்காடு நீலமலை தோட்ட தொழிலாளர் சங்க செயலாளர் நல்லமுத்து மற்றும் பல்வேறு எஸ்டேட் கமிட்டியினர் கோபிநாத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

-நவீன் குமார்.

Leave a Reply