அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா தனது மலேசிய பயணத்தை ரத்து செய்துள்ளதாக மலேசிய பிரதமர் டத்தோ நஜீ துன் ரசாக் தெரிவித்தார்.
02.09.2013 புதன்கிழமை தம்மைத் தொடர்பு கொண்ட ஒபாமா, தவிர்க்க முடியாத காரணத்தால் தாம் மலேசியாவுக்கான பயணத்தை ரத்து செய்வதாக தெரிவித்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக அங்கு பல அரசு நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலர் வேலையிழப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தாம், தலைமைச் செயலாளர் ஜோன் கெர்ரியை அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.