இலங்கை வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் இன்று (14.10.2013) பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற இலங்கை வட மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை மாவட்ட வைத்திய அதிகாரி ஜே.மயிலேறுபெருமாளின் முன்னிலையில், சிவாஜிலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அமைச்சுப் பதவி ஒதுக்கீடு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒன்பது உறுப்பினர்கள், முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பிரதான பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை.
தனியாக முள்ளிவாய்க்கலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாக ஒன்பது உறுப்பினர்கள் உத்தேசித்திருந்தனர். எனினும், மன்னார் மாவட்ட ஆயரின் தலையீடு காணரமாக எட்டு உறுப்பினர்கள் பதவிப் பிரமாண நிகழ்வுகளை முள்ளிவாய்க்காலில் நடத்தவில்லை.
இதனிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.