திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவர் சமர்ஆச்சார்ஜி. இவர் கடந்த 17.10.2013 வியாழக்கிழமை பண மெத்தையில் படுத்து உருண்ட காட்சி டெலிவிஷனில் ஒளிபரப்பானது. தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை எடுத்து வந்து, தனது படுக்கையில் போட்டு படுத்தாகவும், இதன் மூலம் தனது நீண்டகால கனவு நனவானதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அவரது செயல் கட்சிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இது தொடர்பாக கட்சியின் உயர் மட்டக் குழு விசாரணை செய்தது. பண மெத்தையில் படுத்து இருப்பதை செல்போனில் பதிவு செய்து டெலிவிஷன் சேனலில் பணிபுரியும் நண்பருக்கு சமர் ஆச்சார்ஜி கொடுத்தது தெரியவந்தது.
கட்சியின் பெயரை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக சமர் ஆச்சார்ஜி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.