மலேசியாவில் நேற்று (19.10.2013) பெய்த கடும் மழையால் இங்கு கூலிமில் உள்ள 4 மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுவரை 10 தோட்டப்புறங்கள் மற்றும் வீடமைப்புப் பகுதிகளைச் சார்ந்த 200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று (19.10.2013 ) மாலை 3 மணியிலிருந்து பெய்த மழையால் ஆறு மற்றும் சாக்கடைகளிலிருந்து வழிந்தோடிய நீர் மட்டம் 2.5 மீட்டர் உயர்ந்தது.