ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் பி.சரோஜா போட்டியிடுவதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஏற்காடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருமாள், கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கு, வரும் டிசம்பர் 4 -ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பி.சரோஜா, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.