பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 106–வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா காலை 10.30 மணிக்கு தேவர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரை தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் புரட்சித் தலைவி வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினார்கள். தொண்டர்களை பார்த்து முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இரட்டை விரலை காட்டி கையசைத்தார். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வரவேற்றனர். அந்த பகுதி முழுவதும் அ.தி.மு.க. கொடி, தோரணங்களுடன் விழாக் கோலம் பூண்டிருந்தது.