தமிழக அமைச்சரவையில் புதிதாக ஒரு அமைச்சரை சேர்க்கவும், அமைச்சரவையின் இலாகா மாற்றம் தொடர்பாகவும் கவர்னருக்கு முதல்வர் ஜெயலலிதா பரிந்துரை செய்திருந்தார். இதற்கு கவர்னர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வான டாக்டர் சி.விஜயபாஸ்கர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோல் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலம் மற்றும் தொல்லியல் துறைகளை அமைச்சர் கே.சி.வீரமணி கவனிப்பார்.
கவர்னர் மாளிகையில் 1-ம் தேதி பகல் 12.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், புதிய அமைச்சர் பதவியேற்க உள்ளார்.