அ.இ.அ.தி.மு.க மற்றும் ஜெயா தொலைக்காட்சி அதிகாரபூர்வ இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்

admkadmk1அ.இ.அ.தி.மு.க மற்றும் ஜெயா தொலைக்காட்சி http://www.jayatv.tv  http://www.aiadmkallindia.org   அதிகாரபூர்வ இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த சைபர் கும்பல் இந்த தாக்குதலை நடத்தி அனைத்து தரவுகளையும் துடைத்து அழித்து பாகிஸ்தானிய சைபர் கும்பலின் இணையதள பக்கத்தை இணைத்துள்ளது. இதனால் மேற்காணும் அ.இ.அ.தி.மு.க மற்றும் ஜெயா தொலைக்காட்சி அதிகாரபூர்வ இணைய தளங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜெயா தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பு தற்போது http://jayanewslive.com என்ற இணைதள முகவரியில் இயங்கிவருகிறது. சர்வதேச அளவில் இது போன்ற சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருவது இணைய ஊடகங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இது போன்றே நமது உள்ளாட்சித்தகவல் இணைய ஊடகமும் பலமுறை சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என்பதை நமது வாசகர்களும் நன்கு அறிவார்கள்.

 

கே.பி.சுகுமார்