கியுபா நாட்டில் அங்கீகரிக்கப்படாத திரையரங்குகள், வீடியோ விளையாட்டு வணிக நிலையங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. கியுபா நாடு கம்யூனிஸக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்ற ஒரு நாடு. அங்கு தொழில் வழங்குனர்கள் கடந்த வருடத்திலிருந்து பல வீடியோ விளையாட்டு நிலையங்கள், 3D MANIA என்பவற்றை உள்ளடக்கிய திரையரங்குகளை தொடங்கியிருக்கின்றார்கள்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் மக்களின் கவனத்தை இலகுவாகத் தம்பக்கம் இழுக்கத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறான வணிக நிலையங்கள் அங்கீகாரம் இல்லாமல் நடத்துகின்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்தும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள், வீடியோ நிலையங்கள் என்பன சட்டரீதியாக அனுமதிபெற்ற சுயாதீன உணவு விடுதிகளினால் நடத்தப்பட்டன. அங்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு முதன்மையாகவிருந்தாலும், உணவுகளும் வழங்கப்பட்டு வந்தன. ராவுல் காஸ்ரோவினால் கொண்டுவரப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார மாற்றங்களின் கீழ் இவ்வாறான செயற்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
இவ்வாறான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நிறுத்துமாறு கியுபா அமைச்சர் குழுவினரின் நிர்வாகக் குழவானது கம்யூனிஸப் பத்திரிகை மூலமாக அறிக்கையைப் பிரசுரம் செய்திருக்கின்றது.
சிறிய தனியார் வணிக நிலையங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களாயின் அவர்கள் டிசம்பர் மாதம் 31-குள் அவற்றை விற்பனை செய்துவிடும்படியும், வெளிநாட்டு இறக்குமதி தடைசெய்யப்படுகின்றது எனவும் தெரியவருகிறது.
கிட்டத்தட்ட 436,000 கியுபா மக்கள் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்றார்கள் என அரசாங்கப்பதிவுகள் தெரிவிக்கின்றன.