நான் சாவதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் ஒருபோதும் மோதி அரசுக்கு அடிபணியமாட்டேன்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்.

‘ரோஸ் வேலி’, ‘சாரதா சிட்பண்ட்ஸ்’ ஆகிய இரு நிதி நிறுவனங்களில் நடந்த மோசடி தொடர்பாக, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை, சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நள்ளிரவு முதல் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியுள்ளது.

இந்நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மம்தா பானர்ஜி “நான் சாவதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் ஒருபோதும் மோதி அரசுக்கு அடிபணியமாட்டேன். நாட்டில் அவசர நிலையை அமல்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம். தேசத்தை, ஜனநாயகத்தை, அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் வரையில் எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

 

Leave a Reply