திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையிலிருந்து வாங்கி சென்ற 200 மதுபாட்டில்கள், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! -7 பேர் கைது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்தாளப்பேட்டை கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையிலிருந்து, சுமார் 200 மதுபாட்டில்களை, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தைச் சேர்ந்த  தசரதன் (வயது 51), த/பெ ராஜகோபால், ராயமுண்டான்பட்டி,  சந்தோஷ் (வயது 23), த/பெ ராஜேந்திரன், மாரனேரி,  சரத் (வயது 27), த/பெ ஆறுமுகம், இந்தலூர்,  செல்வேந்திரன் (வயது 27), த/பெ மெய்யழகன், மாரனேரி,  அப்பு (வயது 28), த/பெ தங்கப்பன் கடம்பங்குடி,  இருதயராஜ் (வயது 27), த/பெ ஆரோக்கியசாமி, மாரனேரி,  ராஜேந்திரன் (வயது 53), த/பெ தண்டாயுதபாணி, வேப்பங்குடி ஆகிய ஏழு பேர் இருசக்கர வாகனங்களில் வாங்கி சென்றபோது, திருவெறும்பூர் போலிசார் வழிமறித்து பிடித்துள்ளனர். மதுபாட்டில்களையும், அவர்கள் பயன்படுத்திய 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது உண்மையிலுமே  பாரட்டப்பட வேண்டிய விசியம்தான்.

ஆனால், எந்த கேள்வி கேட்பாடும் இல்லாமல், 200 மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்த  டாஸ்மாக்  விற்பனையாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது

மேலும், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பும், டாஸ்மாக் கடை மூடியதற்கு பிறகும், தமிழகம் முழுவதும்  தடையில்லாமல் அதிக விiலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதே அது எப்படிடாஸ்மாக் விற்பனையாளர்கள் உதவியில்லாமல் இதுபோன்ற குற்றங்கள் நடக்குமா?

இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஆர்.சிராசுதீன்., கே.பி.சுகுமார்.

 

Leave a Reply