ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி பணிகள் தீவிரம்! மாவட்ட ஆட்சியர் ரோகினி நேரில் ஆய்வு!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வரும் மே- 31, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ரோகினி அறிவித்திருந்தார். அதற்கான ஏற்காடு அண்ணா பூங்கா மற்றும் சந்தை வளாகத்தில்  சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.

அண்ணா பூங்காவில் புணரமைக்கபடும் நுழைவு வாயில், மலர்கண்காட்சி கேலரிகள் அமைக்கும் பணிகள் மற்றும் சந்தை வளாகத்தில் நடைபெறும் கட்டுமாண பணிகள், படகு இல்ல சாலையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நுழைவு வாயில் உள்ளிட்ட பணிகளை ஆட்சியர் ரோகினி இன்று பார்வையிட்டார். மேலும், தோட்டக்கலைத் துறை, சுற்றுலா துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆட்சியர் ரோகினி அன்னா பூங்காவில் பார்வையிட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த சாலையோர வியாபாரிகள், அதிகாரிகள் தங்கள் கடைகளை அப்புறப்படுத்த வற்புறுத்துவதாக கூறினர். அதற்கு வாகன போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல் கடைகளை வைத்து வியாபாரம் நடத்துமாறு வியாபாரிகளிடம் கூறி சென்றார்.

 

நே.நவீன் குமார்.

Leave a Reply