தமிழகத்தின் புதிய காவல்துறை இயக்குநராக (டிஜிபி)  ஜே.கே.திரிபாதியும், புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்!- உத்தரவின் உண்மை நகல்.

புதிய காவல்துறை இயக்குர் ஜே.கே.திரிபாதி.

சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த ஜே.கே.திரிபாதி, தமிழகத்தின் புதிய காவல்துறை இயக்குநராக (டிஜிபி) நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை இயக்குநராக இருக்கும் (டிஜிபி) டி.கே.ராஜேந்திரன் பதவி காலம் நாளையுடன் நிறைவடைவதால்,  புதிய காவல்துறை இயக்குநராக (டிஜிபி) ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைமைச் செயலாளர் கே.சண்முகம் .

நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகத்தை, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளையுடன் ஓய்வு பெறுவதால், கே.சண்முகம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply