ஆட்டோவில் அதிகமான நபர்களை ஏற்றக்கூடாது!- ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு.

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி, போக்குவரத்து காவல் துறையினர் இன்று (08.07.2019) மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றி விழிப்புணர்வு அளித்தனர்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்படி பேருந்து நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்தம் செய்யக்கூடாது என்றும், ஆட்டோக்களை சாலையின் நடுவே ஓட்டாமல் சாலையின் இடதுபுறம் மட்டுமே ஓட்டவேண்டும் என்றும், சாலையின் வலதுபுறமோ அல்லது இடதுபுறமோ ஆட்டோவை திருப்பும்போது பக்கவாட்டு கண்ணாடியை பார்த்து பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு இன்றி INDICATOR (குறியீடு) போட்டு திரும்பவேண்டும் என்றும், அதிவேகமாக செல்வது ஆபத்தை விளைவிக்கும் என்றும் மற்றும் ஆட்டோவில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் அதிகமான நபர்களை ஏற்றக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்கள்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply