உலகம் முழுவதும் அரிய உயிரினங்கள் பட்டியலில் இருந்து வரும் இந்தியாவின் தேசிய விலங்கான புலியை, உத்தர பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டம், டியுரியா பகுதியில் வசிக்கும் மக்கள், விவசாய நிலத்துக்குள் புகுந்து மனிதர்களை தாக்கியதற்காக, கூட்டமாக ஒன்று திரண்டு “பெண் புலி” ஒன்றை சுற்றி வளைத்து தடியாலே அடித்து கொன்றுள்ளனர்.
இது சம்மந்தமாக வனத்துறையினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொடிய வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறிந்து, அவற்றிடமிருந்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய வனத்துறையினர், தங்கள் கடமைகளை சரியாக செய்யாதக் காரணத்தால், மனித மிருகங்களின் கூட்டுத் தாக்குதலுக்கு அநியாயமாக ஒரு “பெண் புலி” பலியாகியுள்ளது.
வனத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை தவிர, மற்ற அனைவரும் பணி இடத்திற்கு முறையாக செல்வதுமில்லை. பணி இடத்தித்தில் தங்கி பணியாற்றுவதுமில்லை. இதை மத்திய, மாநில அரசுகள் முறையாக கண்காணிக்காதவரை, இதுபோன்ற ஆபத்துக்களும், தேசிய அவமானங்களும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின், BAMS., M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
Tamil Online Media