இந்திய இராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக, இந்திய இராணுவத்தின் லெட்டர் பேடுகளை போலியாக தயாரித்து, பணி உத்தரவுகளை வழங்கி, மோசடி வேலைகளில் ஈடுப்பட்டுவரும் சமூக விரோதிகளிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி, இந்திய இராணுவத்தின் தலைமை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்திய இராணுவ பணியில் சேர்வதற்கு சிபாரிசோ, பரிந்துரையோ, பணமோ தேவையில்லை. உரிய வயதும், கல்வி தகுதியும், உடல் திறனும், திறமையும், தேசப்பற்றும் இருந்தால் நேரடி தேர்வின் மூலம் இந்திய இராணுவத்தில் பணியில் சேரலாம். எனவே, இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com