ஜம்மு & காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து!- நிரந்தரமாக முற்றுபுள்ளி வைத்த பிரதமர் நரேந்திர மோதி.

இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி, சில நிபந்தனைகளுடன், ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் 1949-இல் இணைக்க சம்மதித்தார்.

மன்னர் ஹரிசிங்சின் நிபந்தனைகளை நிறைவேற்ற, அப்போதைய இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொண்டு, சட்டப் பிரிவு 370-ல் ஜம்மு & காஷ்மீர் பகுதிக்கும்மக்களுக்கும் சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது.

சட்டப் பிரிவு 370-இன் கீழ் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளின் முக்கிய அம்சங்கள்:

இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் இசைவு இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால், இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.

இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது.

ஆனால், ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.

இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது.

இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.

இந்நிலையில், இதற்கு நிரந்தரமாக முற்றுபுள்ளி வைக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான நடுவண் அரசு, சட்ட முன்வடிவுகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [101.28 KB]

ஆம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370-ஐ நீக்குவதற்கான மசோதா.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றுவதற்கான மசோதா.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் 35ஏ-ஐ நீக்குவதற்கான மசோதா.

ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் அற்ற யூனியன் பிரதேசமாகவும் ஆக்குவதற்கான மசோதா ஆகியவற்றை முன்வைத்தது.

இச்சட்ட முன்வடிவுக்கு  பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, அதிமுக, பிஜு ஜனதா தளம், சிவ சேனா போன்ற அரசியல் கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, மதிமுக, இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரு அவைகளிலும் வழக்கம்போல எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்திய குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த்.

இந்நிலையில், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஐ நீக்கம் செய்து, இந்திய குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது இந்திய அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதியின் இந்த அதிரடி நடவடிக்கையால், ஜம்மு & காஷ்மீரில் என்ன நடக்கும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

Leave a Reply