தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
-எஸ்.சதிஸ் சர்மா.