அதிகாலை நேரத்தில் ஏற்காடு மலைப்பாதையில் பாறை சரிந்து விழுந்தன!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த மூன்று தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வந்தது. நேற்று இரவு சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழையால், இன்று அதிகாலை சுமார் 4:00 மணியளவில் கொண்டப்பநாய்க்கன்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகில் ராட்சத பாறைகள் சாலையின் நடுவே சரிந்து விழுந்தது. மேலும், சில இடங்களில் சிறு, சிறு பாறைகள் சரிந்து விழுந்தன.

இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அந்த பாறைகளை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து இன்று காலை 6:30 மணிக்கு போக்குவரத்து சரிசெய்யப்பட்டு அவ்வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன.

-நே.நவீன் குமார்.

Leave a Reply