ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் குடும்பத்தாரின் உண்மையான சொத்து விபரங்கள்! -இதைத் தவிர வேறு சொத்துக்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான .சிதம்பரத்தை, மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.) அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்ற அந்த நிமிடத்தில் இருந்து, இந்த செய்தி நமது ஊடகத்தில் பதிவேற்றம் செய்யும் இந்த நிமிடம் வரை, இந்தியாவில் உள்ள அச்சு, காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் அனைத்திலும், .சிதம்பரம் மற்றும் அவரது மகனும், சிவகங்கை மக்களவை உறுப்பினருமான  கார்த்தி .சிதம்பரம் ஆகியோரின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்து எந்தவித ஆதாரமும் இன்றி யூகங்களின் அடிப்படையில் பல்வேறு வதந்திகளை செய்திகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. இது நாட்டு மக்கள் மத்தியில் மிகபெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும்போதுஓடி போனவன் உத்தமன், மாட்டிக்கொண்டவன் திருடன்” என்ற கிராமத்து பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.

.சிதம்பரமும் அவரது மகன்  கார்த்தி .சிதம்பரமும் அவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்தும், அவர்களுக்கு உள்ள கடன் விபரங்கள் குறித்தும், 2009, 2014, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில், இந்திய தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு தாக்கல் செய்துள்ளார்கள். அவற்றின் உண்மை நகல்களை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மகராஷ்ரா மாநிலங்களவை உறுப்பினருமான .சிதம்பரம் 2016-ஆம் ஆண்டு மே மாதம் 31-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் விபரம்.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [9.73 MB]

2009-ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவை உறுப்பினர் தேர்தலில் .சிதம்பரம் போட்டியிட்டபோது, 23.04.2009 அன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் .சிதம்பரம் அளித்த அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் விபரம்.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [3.55 MB]

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம்.

2019ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவை உறுப்பினர் தேர்தலில் கார்த்தி .சிதம்பரம் போட்டியிட்டபோது 25.03.2019 அன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் கார்த்தி .சிதம்பரம் அளித்த அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் விபரம்.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [10.42 MB]

2014ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவை உறுப்பினர் தேர்தலில் கார்த்தி .சிதம்பரம் போட்டியிட்டபோது 05.04.2014 அன்று, இந்திய தேர்தல் ஆணையத்திடம் கார்த்தி .சிதம்பரம் அளித்த அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் விபரம்.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [1.46 MB]

இந்த உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தான் .சிதம்பரம், அவரது மகன் கார்த்தி .சிதம்பரம் ஆகியோரின் குடும்பத்தாரின் சட்டப்பூர்வமான உண்மையான சொத்துக்கள். இதைத் தவிர வேறு சொத்துக்கள் அவர்கள் பெயரிலோ, அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ எங்கேயாவது இருந்தால் சொல்லுங்கள், அதை அம்பலப்படுத்த நாங்களும் தயாராக இருக்கின்றோம்.

மேலும், உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பொய்யானவை, போலியானவை என்பதை ஆதாரப்பூர்வமாக யாராவது நிரூபித்தால், அவர்களின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் பதவி செல்லாது என்று நீதிமன்றம் மூலம் அறிவிக்கலாம்.

இப்படி எதையும் செய்யாமல், வதந்திகளை மட்டும் செய்திகளாக வெளியிடுவது எந்த வகையில் நியாயம்?!

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன்  கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோர் நல்லவர்களா? கெட்டவர்களா? ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை ஆராய்வது இச்செய்தி தொகுப்பின் நோக்கமல்ல! அதை நீதி மன்றம் பார்த்துக்கொள்ளும்.

ஆனால், இதுபோன்று பரப்பப்படும் ஆதாரமற்றச் செய்திகள், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை அச்சு மற்றும் காட்சி ஊடககாரர்கள் உணரவேண்டும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

One Response

  1. MANIMARAN August 24, 2019 7:28 pm

Leave a Reply