‘சமய நல்லிணக்கத்திற்கு தமிழ் இலக்கியங்களின் பங்கு’ ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கு திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் நடைப்பெற்றது.

திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழாய்வுதுறை, காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி தமிழாய்வு துறை, மலேசியத் தமிழ் மணி மன்றம் இணைந்து சமய, இன, வன்முறையை தடுக்கும் விதத்தில், திருச்சி அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில்  ‘சமய நல்லிணக்கத்திற்கு தமிழ் இலக்கியங்களின் பங்கு’ என்ற தலைப்பில் ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கு நடைப்பெற்றது

இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துறையரசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பன்னாட்டுக் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

தற்போது நடைபெறும் இந்த பன்னாட்டு கருத்தரங்கு காலத்தின் தேவை அறிந்து நடத்தப்படுவதாகவும், சமய நல்லிணக்கத்திற்கு தமிழ் இலக்கியங்களில் பங்களிப்பு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றதாகும். தமிழ் இலக்கியங்களில் பகை, புறை (இணக்கம்) என இரண்டு உள்ளது. 

இலக்கியத்தில் பகை, புறை என்பது தேவையில்லாதது, அதில் என்ன நன்மை உள்ளது என்பதை மட்டுமே ஆராயவேண்டும். பக்தி இலக்கியம், ஐம்பெருங்காப்பியம் பல உள்ளது. தொல்காப்பியத்தில் 5 வகைகளிலும், சிலப்பதிகாரத்திலும், சமய புறை சிற்றிலக்கியங்களிலும் உள்ளது. தமிழ் மொழி வரலாறு வளர்ச்சிக்கு அனைத்து சமயமும் உறுதுணையாக உள்ளது என்றார்.

இக்கருத்தரங்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழியல்துறை தலைவர் சத்தியமூர்த்தி, காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் கிரிஸ்டி செல்வராணி, தூய வளனார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சூசை, ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறைத் தலைவரும், கலைப்புல முதன்மையருமான சையத் ஜாகிர்ஹசன், மலேசியத் தமிழ்மணி மன்ற மலேசியா தேசிய தலைவர் லிங்கம் உட்பட கருத்தரங்கு படைப்பாளர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் 12 கல்லூரி பேராசிரியர்கள் தங்களது கட்டுரைகளை சமர்பித்தனர் .

முன்னதாக கல்லூரி தமிழாய்வுத் துறை தலைவர் விஜயசுந்தரி வரவேற்றார். சுயநிதி பிரிவு தமிழ்த்துறைத் தலைவர் ராமர் நன்றி கூறினார்.

-ஆர்.சிராசுதீன்.

 

 

One Response

  1. MANIMARAN September 30, 2019 9:20 am

Leave a Reply