முஸ்லிம், தலித் மற்றும் இதர சிறுபான்மையினர்கள் மீது நடத்தப்படும் கூட்டு வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில், திரைப்பட இயக்குநர் மணி ரத்னம், பாலிவுட் திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், ஷியாம் பெனகல், நடிகை சுமித்ரா சேட்டர்ஜி, சுபா முத்கல், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடந்த ஜீலை மாதம் 23 –ந்தேதி பிரதமர் நரேந்திர மோதிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்கள்.
அவர்கள் எழுதிய கடிதத்தில், “முஸ்லிம்களுக்கு, தலித்துகளுக்கு மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டு வன்முறை உடனடியாக நிறுத்தப்படவேண்டும். எதிர் கருத்து இல்லாமல் ஜனநாயகம் இல்லை. ஜெய் ஸ்ரீ ராம் என்கிற கோஷம் வன்முறையைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இதோ அக்கடிதத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
இந்நிலையில், பிகார் மாநிலம் முசாஃபர்பூரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர், மேற்படி 49 பிரபலங்கள் மீதும் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இவ்வழக்கை விசாரித்த முசாஃபர்பூர் Chief Judicial Magistrate சூர்ய காந்த் திவாரி –Suryakant Tiwary வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து பிகார் மாநில முசாஃபர்பூர் காவல் நிலையத்தில், மேற்படி 49 நபர்கள் மீது தேசத் துரோக வழக்கு (Sedition Case) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com