ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதி மண்டல வளர்ச்சி அதிகாரியான சரளா என்பவர், அம்மாநில ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் கட்சியின் நெல்லூர் ரூரல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ரெட்டி மீது புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனி நபர் ஒருவருக்கு குடிநீர் இணைப்பு வழங்க தாமதம் ஆனதாக கூறி ஸ்ரீதர்ரெட்டி தன்னை மொபைலில் மிரட்டுவதாகவும் மற்றும் நேரில் வந்து குடும்பத்தாரை மிரட்டுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார் .
இத்தகவலை அறிந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, உடனே டிஜிபி-யை தொடர்பு கொண்டு தவறு யார் மீது இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அதிரடியாக உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பெண் அதிகாரியை மிரட்டிய நெல்லூர் ரூரல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ரெட்டியை போலீசார் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
பெண் அதிகாரியை மிரட்டிய நெல்லூர் ரூரல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ரெட்டியின் முழு விபரம்:
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com