இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரட்ன போதைப் பொருள் இறக்குமதி செய்வதாவும், காவல்துறை பொறுப்பதிகாரி போதைப் பொருள் விநியோகம் செய்து வருவதாகவும் ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
பிரதமரின் ஒத்துழைப்புடன் கொள்கலனின் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
விஜித ஹேரத்
பாகிஸ்தானிய போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து இந்தப் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். தெரிந்தோ தெரியாமலோ குற்றச் செயலில் தொடர்புபட்டிருப்பதனால் பிரதமர் பதவியை விலக வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பிரதமர் மட்டுமன்றி ஒட்டுமொத்த அரசாங்கமும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் போதைப் பொருள் கடத்த, காவல் நிலையப் பொறுப்பதிகாரி விநியோகம் செய்யும் சூழ்நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இதுவே ஆசியாவின் அதிசயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.