யேசுநாதர் பிறந்த பெத்லஹேம் நகரில் உள்ள நேட்டிவிட்டி தேவாலயத்துக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 06.01.2014 விஜயம் செய்திருந்தார்.
அத்துடன் அங்கு ஜெரூசலம் புனித நகரின் தலைவர் தியோபிலோஸ் மூன்றாம் பிரதிபா நடத்திய இரவு விருந்தில் மஹிந்த ராஜபக்சவும், அவரது மனைவி சிரந்தி ராஜபக்சவும்கலந்து கொண்டனர்.
மேலும், பாலஸ்தீன ஜனாதிபதி டாக்டர் மஹ்மூத் அப்பாஸ், பாலஸ்தீன பிரதமர் ராமி ஹம்தல்லா மற்றும் முக்கிய வெளிநாட்டு பிரமுகர்களும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாலஸ்தீன வர்த்தக பிரமுகர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, பாலஸ்தீன சுதந்திர போராட்டத்திற்கு இலங்கை பூரண ஆதரவினை வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் தெரிவித்துள்ளார்.
விரைவில் பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இலங்கையின் அவா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.