தேசிய மக்கள் தொகை பதிவேடு அவசியம் தேவை! -நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பும், ஆதரவும்.

தேசிய மக்கள் தொகை  பதிவேடு (National Population Register -(NPR) நாட்டிற்கு அவசியம் தேவை. 2010-லேயே இதை காங்கிரஸ் செய்துள்ளார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர், யார் உள்நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவரும். மற்றபடி தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-(NRC)யை இந்தியா முழுக்க அமல்படுத்துவது குறித்து அவர்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

குடியுரிமை (திருத்த) சட்டம்Citizenship (Amendment) Act-(CAA) பற்றி இஸ்லாமியர்களுக்கு தேவையற்ற அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

பாகிஸ்தானோடு நாங்கள் போகமாட்டோம், இதுதான் எங்கள் ஜென்ம பூமி என்று சொல்லி இந்த மண்ணிலேயே வாழ்ந்து, இங்கேதான் இறப்போம் என்று தீர்க்கமாக இருக்கும் இஸ்லாமியர்களைவெளியே போஎன்று யார் சொல்ல முடியும்? அவர்கள் இந்தியர்கள், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்த ரஜினிகாந்த் முதலில் வந்து நிற்பான்.

மற்றபடி சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்கும், மதகுருமார்கள் தங்கள் லாபத்திற்கும் இஸ்லாமிய மக்களை தூண்டிவிடுகிறார்கள். நான் மாணவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் இவர்களை நம்பி போராடப்போய், உங்கள் வாழ்க்கையை பலி கொடுத்துவிடாதீர்கள். எதையும் தீர விசாரித்துவிட்டு போராடுங்கள்.

நான் நேர்மையான தொழில் செய்கிறேன். எந்த சட்ட விரோதமான வழியிலும் பணம் சம்பாதிக்கவில்லை.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் 05.02.2020 அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது.


-டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

Leave a Reply