தினந்தோறும் குளிக்காவிட்டால் எதையோ பறிகொடுத்தது போன்று அனைவரும் உணர்வார்கள். உலகமே இவ்வாறு சுழன்று கொண்டிருக்க, ஈரான் நாட்டை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இளவயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை அடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அமோவ் ஹாஜி, இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார்.
இவரை மடக்கி பிடித்து குளிக்க வைக்க ஊர்க்காரர்கள் எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் போனது. செயின் ஸ்மோக்கர் ஆன இவர் விரும்பி சாப்பிடுவது, கெட்டுப்போன இறைச்சியையும், செத்துக் கிடக்கும் உயிரினங்களின் மாமிசத்தையும் தான்.
இந்த சாதனையை இவர் எட்டுவதற்கு முன்னர் வரை 66 வயதான ஒரு நபர் 38 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்தது தான் பெரிய சாதனையாக கருதப்பட்டது. முந்தைய சாதனைக்கு சொந்தக்காரர், இந்தியாவின் வாரணாசி பகுதியை சேர்ந்த கைலாஷ் சிங் என்பவர்தான். ‘உயிரே போனாலும் இனி குளிக்கப்போவது இல்லை’ என 1974-ம் ஆண்டில் சபதமேற்றுக் கொண்ட இவர் 2012 வரை 38 ஆண்டுகளாக குளித்ததே கிடையாது.
அந்த சாதனையை தற்போது அமோவ் ஹாஜி முறியடித்து விட்டார்.