கொரோனாவை தடுக்க கை கழுவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி! -ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்துகொண்டார்.

LIVE:Chief Minister Shri Naveen Patnaik joins the mass hand washing program in the SAFE ODISHA campaign.

LIVE:Chief Minister Shri Naveen Patnaik joins the mass hand washing program in the SAFE ODISHA campaign.

Posted by CMO Odisha on Friday, 13 March 2020

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக ஒடிசா அரசு ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளது. கொரோனாவை மாநில பேரிடராக பிரகடனம் செய்திருப்பதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அத்துடன் நோய் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31 வரை மூடப்படும். தேர்வு எழுதுபவர்களுக்கு இது பொருந்தாது.

சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தும் 31 வரை மூடப்படும்.

அத்யாவசியமற்ற கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை ரத்து செய்ய வேண்டும்.

சமூகக் கூட்டங்கள், மத நிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை உள்ளூர் அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.

சட்டசபை கூட்டத் தொடர் மார்ச் 29-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா நோய் பரவாமல் தடுக்க கை கழுவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்றது. இதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்துகொண்டார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply