கொரோனாவை எதிர்கொள்வது குறித்து, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

LIVE Interaction with SAARC leaders

LIVE Interaction with SAARC leaders

Posted by Narendra Modi on Sunday, 15 March 2020

கொரோனாவை எதிர்கொள்வது குறித்து, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு தலைவர்களுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று கலந்துரையாடினார்.

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு(South Asian Association for Regional Cooperation, SAARC) சார்க் என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.

தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.

ஏப்ரல் 2007-ல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14-வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8-வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது

இந்நிலையில், உலகம் முழுவதும் “கொரோனா வைரஸ்” (COVID-19) கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதால், இதுகுறித்து சார்க் நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து விவாதிக்க முடியாததால், வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி  கலந்துரையாடினார்.

மேன்மை தங்கியவர்களே,

குறுகிய கால இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சிறப்புக் கலந்துரையாடலில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க நான் விரும்புகிறேன்.

அண்மையில் அறுவைச் சிகிச்சை நடந்த நிலையில், உடனடியாக இதில் கலந்து கொண்டுள்ள நமது நண்பர் பிரதமர் ஒளிக்கு நான் சிறப்புமிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். அதிபர் அஷ்ரப் கனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று நம்மிடையே கலந்து கொண்டுள்ள சார்க் அமைப்பின் புதிய பொதுச்செயலாளரையும் நான் வரவேற்கிறேன். காந்திநகரிலிருந்து பங்கேற்றுள்ள சார்க் பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநரையும் நான் வரவேற்கிறேன்.

மேன்மை தங்கியவர்களே,

கொவிட்-19 தொற்றை அண்மையில் உலக சுகாதார அமைப்பு கொள்ளை நோயாக அறிவித்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இதுவரை, நமது பிராந்தியத்தில் சுமார் 150 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். நமது சார்க் பிராந்தியம் அனைத்துத் தரப்பு மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினரின் இருப்பிடமாக உள்ளது.  மிக அதிக மக்கள்  வசிக்கும் பகுதியாகவும் இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகள் என்ற முறையில், மருத்துவ வசதிகளைப் பெறுவதில் நம் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. நமது மக்களுக்கிடையிலான உறவுகள் தொன்மையானவை. நமது சமுதாயங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தவை, எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒருமித்த வெற்றியைப்  பெறுவதற்கு தயாராக வேண்டும்.

மேன்மை தங்கியவர்களே,

இந்தச் சவாலை எதிர்கொள்ள நாம் தயாராகும் நிலையில், இதுவரை இந்தத் தொற்று பரவாமல் தடுப்பதில், இந்தியாவுக்கு எற்பட்ட அனுபவங்களை  நான் சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.

“தயராகுங்கள், பீதியடைய வேண்டாம்” என்பதே எங்களது தாரக மந்திரம். இந்தப் பிரச்சினையை ஒருபோதும், குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதில், கவனமாக இருந்ததுடன், தேவையற்ற கருத்துக்களையும் தவிர்த்தோம்.  படிப்படியான முறைகளில், தீவிர நடவடிக்கைகளில் இறங்கி, நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில், இந்தியாவுக்குள் வருபவர்களை பரிசோதிக்க ஆரம்பித்தோம். அதேசமயம் பயணத்துக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக அதிகரித்தோம். இந்தப் படிப்படியான அணுகுமுறை அச்சத்தைத் தவிர்க்க எங்களுக்கு உதவியது. தொலைக்காட்சி, அச்சு ஊடகம், சமூக ஊடகம் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பிரச்சாரங்களை அதிகரித்தோம்.

தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளவர்களைக்  கண்டறியும் சிறப்பு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். நாடு முழுவதும் உள்ள எங்களது மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சிகள் மூலம் விரைவாக பரிசோதிக்கும் திறனை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தோம். நோய் கண்டறியும் திறனையும் நாங்கள் அதிகரித்தோம். இரண்டு மாதங்களுக்குள் 60க்கும் மேற்பட்ட பரிசோதனைக் கூடங்கள் மூலமாக இந்த வசதியைப் பெற்றுள்ளோம்.

இந்த நோயை  எதிர்கொண்டு கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடைமுறைகளை உருவாக்கியுள்ளோம். நுழைவு இடங்களில் பரிசோதனை, தொற்று பாதித்துள்ள சந்தேகத்திற்கு இடமானவர்களை கண்டறிதல், அவர்களை தனி இடத்தில் பராமரித்தல், சிகிச்சைக்கு பின்னர் வீட்டுக்கு அனுப்புதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம்.

வெளிநாடுகளில் உள்ள எங்களது மக்களின் அழைப்புகளுக்கும் நாங்கள் பதில் அளித்து வருகிறோம். பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 1,400 இந்தியர்களை நாங்கள் அப்புறப்படுத்தி அழைத்து வந்துள்ளோம். ‘முதலில் அண்டை நாடுகள்’ என்ற எங்களின் கொள்கையின்படி, உங்கள் நாடுகளைச் சேர்ந்த சிலரையும் நாங்கள் காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறோம்.

வெளிநாடுகளில் பணி அமர்த்தப்பட்டுள்ள எங்களது நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களை அப்புறப்படுத்துதல் போன்ற நடைமுறையையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இந்தியாவில் இருக்கும் மற்ற நாட்டு குடிமக்கள் குறித்த சம்பந்தப்பட்ட நாடுகளின் கவலைகளையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கி இருக்கிறோம்.

மேன்மை தங்கியவர்களே,

இன்னும் நாம் தெளிவற்ற நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் முழுமையாக உணர்ந்துள்ளோம். நமது பெரும் முயற்சிகளுக்கு இடையே, இந்த நிலைமை எப்படி முடிவுக்கு வரும் என்பதை நம்மால் உறுதியாகக் கூறமுடியாத நிலையில் இருக்கிறோம்.  நீங்களும் இது  போன்ற கவலைகளை எதிர்கொண்டு இருப்பீர்கள். ஆகவேதான் நமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நம் அனைவருக்கும் மதிப்புமிக்க தளமாக இது இருக்கும்.

உங்கள் கருத்துக்களைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி.

Excellencies,

I would like to thank you all for joining this special interaction at short notice.

I specially thank our friend Prime Minister Oli who has joined us almost immediately after his recent surgery. I wish him a speedy recovery.  I would also like to congratulate President Ashraf Ghani for his recent re-election.

I welcome the new Secretary-General of SAARC, who is also with us today. I also acknowledge the presence of the Director of the  SAARC Disaster Management Centre, from Gandhinagar.

Excellencies,

As we all know, COVID-19 has recently been classified by W.H.O. as a pandemic.

So far, our region has listed fewer than 150 cases. But we need to remain vigilant.Our SAARC region is home to nearly one-fifth of all humanity. It is densely populated.As developing countries, all of us have significant challenges in terms of access to healthcare facilities.  Our people-to-people ties are ancient, and our societies are deeply inter-connected.Therefore, we must all prepare together, we must all act together, and we must all succeed together.

Excellencies,

As we prepare to face this challenge, let me briefly share India’s experience of combating the spread of this virus so far.

“Prepare, but don’t panic” has been our guiding mantra.We were careful to not underestimate the problem, but also to avoid knee-jerk reactions. We have tried to take proactive steps, including a graded response mechanism. We started screening entry into India from mid-January itself, while also gradually increasing restrictions on travel. The step-by-step approach has helped avoid panic.We have increased our public awareness campaigns on TV, print and social media.

We have made special efforts to reach out to vulnerable groups.We have worked to quickly ramp up capacity in our system including through training our medical staff across the country.We have also increased diagnostic capabilities. Within two months, we moved from one major facility for pan-India testing, to more than 60 such labs.

And, we have developed protocols for each stage of managing this pandemic : for screening at entry points; contact tracing of suspected cases; quarantineand management of isolation facilities; and for discharge of cleared cases.

We also responded to the call of our people abroad. We evacuated nearly 1400 Indians from different countries. We also similarly helped some of your citizens, in accordance with our ‘neighbourhood first policy’.

We have now built up a protocol for such evacuations, including carrying out testing by our mobile teams deployed abroad.

We recognised that other countries would be also concerned about their citizens in India.  So we briefed foreign Ambassadors about the steps we were taking.

Excellencies,

We fully recognize that we are still in an unknown situation. We can not predict with certainty how the situation will unfold despite our best efforts. You must also be facing similar concerns. This is why it would be most valuable for all of us to share our perspectives.

I look forward to hearing your views.

Thank you.

-டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

Leave a Reply