ஹைட்ராக்சி குளோரோகுயின் (Hydroxy chloroquine) என்பது பிரதானமாக மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். எனினும் இது அனைத்து வகை மலேரியா தொற்றுக்களுக்கும் எதிராகப் பயன்படுத்த இயலாது. ஏனெனில், சில மலேரியா ஒட்டுண்ணி வகைகள் இம்மருந்தின் தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக இம்மருந்துக்கு எதிர்ப்புத்தன்மையை அடைந்துள்ளது.
மேலும், இது அமீபா வயிற்றுளைவு, முடக்குவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் பயன்படுத்தப் படுகின்றது.
இந்நிலையில், தற்பொழுது “கொரோனா” வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் (Hydroxy chloroquine) பயன்படுத்த முடியும் என சில ஆரம்ப கட்ட ஆராய்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில், வேறு வழியில்லாமல் மலேரியா நோய்க்கு எதிராக வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின்(Hydroxy chloroquine) என்ற எதிர்ப்பு மருந்தை “கொரோனா வைரஸ்” தொற்று நோயாளிகளுக்கு வழங்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
உணவில் வெறுப்பு, தோல் அரிப்பு, வயிற்றோட்டம் ஆகியன இதன் பொதுவான பக்கவிளைவுகளாகும்.
தலைவலி, வலிப்பு, பார்வை மங்குதல், இதயத்துடிப்பில் மாறுதல்கள் போன்ற பக்க விளைவுகளும் ஒரு சிலருக்கு ஏற்படகூடும். எனவே இம்மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.
அரசு பதிவுப் பெற்ற அலோபதி மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பேரில் உணவுடன் அல்லது உணவு உட்கொண்டவுடன் இம்மருந்தை எடுத்தல் சிறந்தது.
-டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Ummmm..