#புதுச்சேரி | முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் நாளை முதல் 100 ரூபாய் அபராதம். புதுச்சேரியில் 6 பேர் கொரோனா தொற்றுவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒருவர் 2 முறை ரத்த பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது. அதனால் தற்போது 5 பேர் மட்டுமே புதுச்சேரியில் தொற்றுவுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்காமல் இருந்து வருகின்றது. இதற்க்கு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்.இதனால் பொதுமக்கள் வரும் 3 ம் தேதிவரை ஊரடங்கை பின்பற்றி தொற்று இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும் வரும் 20 ம் தேதியில் இருந்து அத்தியாவசிய தொழிற்சாலைகள் இயக்க படும். புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் வருகின்ற்னர். அதனால் தமிழக எல்லை பகுதிகளில் மேலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு யாரையும் உள்ளெ அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்து. புதுச்சேரியில் பொதுமக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். அதனால் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றும் அப்படி முகக்கவசம் இல்லாமல் வருவோரிடம் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.#Puducherry | ₹100/- fine for those who failed to wear mask from tomorrow. 6 #corona infected cases were under treatment in that one case confirmed negative after the test in Puducherry.Therefore, 5 cases are undergoing treatment. Thanks to all the department staffs for their efforts to the contain the spread of #corona virus in Puducherry.Till May 3rd , people should follow the #lockdown in Puducherry to contain the spread of #corona .From 20th May manufacturing of essential goods will resume. Many workers are coming from Tamilnadu to Puducherry everyday. Orders are directed not to allow them inside and maintain the lockdown strictly in Puducherry borders.
Posted by V.Narayanasamy on Thursday, 16 April 2020
புதுச்சேரியில் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி போட நானும், அமைச்சர் கந்தசாமியும் முடிவு செய்து, அதற்கான கோப்பு தயார் செய்து துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். #புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தலையீட்டினால் புதுச்சேரி மாநில மக்களுக்கு காலத்தோடு அரிசி சென்று சேரவில்லை.Myself and Hon'ble Welfare Minister Shri Kandasamy decided to give rice for yellow ration card beneficiaries and the file sent to Hon'ble Lt. Governor.Due to interference of #Puducherry Lt Governor, the timely delivery of rice is delaying.
Posted by V.Narayanasamy on Thursday, 16 April 2020
புதுச்சேரியில் 6 பேர் கொரோனா தொற்றுவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒருவர் 2 முறை இரத்த பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது. அதனால் தற்போது 5 பேர் மட்டுமே புதுச்சேரியில் தொற்றுவுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்காமல் இருந்து வருகின்றது. இதற்க்கு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றேன். இதனால் பொதுமக்கள் வரும் மே-3 ம் தேதி வரை ஊரடங்கை பின்பற்றி தொற்று இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மேலும், ஏப்ரல் 20 ம் தேதியில் இருந்து அத்தியாவசிய தொழிற்சாலைகள் இயக்கப்படும். புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் வருகின்றனர். அதனால் தமிழக எல்லை பகுதிகளில் மேலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பொதுமக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். அப்படி முகக்கவசம் இல்லாமல் வருவோரிடம் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு புதுச்சேரி முதலமைச்சர் V.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
-திவாஹர்.
Good