தமிழகத்தில் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம்!-தமிழக அரசு உத்தரவு!-இந்த கால அவகாசத்தை இந்த ஆண்டு (டிசம்பர்) இறுதிவரை நீட்டிக்க வேண்டும்.

“கொரோனா” பரவல் தடுப்பு நடவடிக்கைக் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவித்தார்.

ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை இந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கு மக்கள் செலுத்தவேண்டிய இந்த கட்டணத்தை ஜூன் மாதம் வரை செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த கால அவகாசத்தை இந்த ஆண்டு (டிசம்பர்) இறுதிவரை நீட்டிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதி அடைவார்கள்.

தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இதை பரிசீலனை செய்வாரா?

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply