அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றும் நபர்கள் உடல் நலத்தில் அக்கறைச் செலுத்துங்கள்!-மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை.

 

செய்தி சேகரிப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு செல்லும் நிருபர்கள் மற்றும் கேமராமேன்கள் “கொரோனா வைரஸ்” தொற்றுக்கு உள்ளாகி வருவதால், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றும் நபர்கள் அனைவரும், உடல் நலத்தில் அக்கறைச் செலுத்த வேண்டும் என்று, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றும் நபர்கள் அனைவரும், செய்தியாளர்கள் சந்திப்பின்போது சமூக இடவெளியை கடுகளவும் கடைப்பிடிப்பதில்லை என்பதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மேலும், மைக்குகளை பிடிக்கும் போதும், கேள்விகளைக் கேட்கும் போதும், நிகழ்ச்சி மற்றும் சம்பவங்களை கேமராவில் பதிவு செய்யும் போதும், ஆட்டு மந்தைகளைப்போல முண்டியடித்துக் கொண்டு செல்வது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது.

இதில் சிறிய ஊடகம், பெரிய ஊடகம் மற்றும் ஆங்கில ஊடகம், தமிழ் ஊடகம் என்ற பிரிவினை வேறு. ஆனால், இதெல்லாம் கொரோனா வைரஸிற்கு சத்தியமாக தெரியாது. ஏனென்றால், நெருப்பு மற்றும் நோய் இவை இரண்டிற்கும் நல்லவன், கெட்டவன், சாதி, மதம், இனம், மொழி என்ற எந்த பேதமும் தெரியாது. எனவே, ஒற்றுமையாக மட்டுமல்ல;  எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய தருணமிது.

உங்களை நம்பி ஊடக நிறுவனங்கள் இருக்கிறதோ இல்லையோ, ஆனால், உங்களை மட்டுமே நம்பி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply