தொழிலாளர்கள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைகின்றனர். அவர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகம் என்பது நமது தேசத்தின் அடித்தளம்.
தொடக்கத்தில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நான்கு மணி நேரத்திற்கு முன்பாக அறிவித்ததால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
1947 பிறகு இந்தியா ஒரு பெரிய சோகத்தை கண்டது இதுவே முதல் முறை. ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், உணவு இல்லாமல், மருந்துகள் இல்லாமல், பணம் இல்லாமல், போக்குவரத்து இல்லாமல், பல நூறு கிலோ மீட்டர் கால் நடையாகவே செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இது நம் இதயங்களை நொறுங்க செய்தது.
இன்றும் லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்களின் வீடுகளுக்கும், குடும்பங்களுக்கும் கஷ்டப்பட்டு திரும்பி வர விரும்புகிறார்கள். ஆனால், அவர்களிடம் போதுமான பணம் இல்லை. அவர்களுக்கு இலவச போக்குவரத்தும் இல்லை. நெருக்கடியான இந்த நேரத்தில் மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் ரயில் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் வசூலிப்பது என்பது பெரும் கவலைக்குரியது.
நமது தொழிலாளர்களே நாட்டின் வளர்ச்சியின் தூதர்கள். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமான பயணத்தை ஏற்பாடு செய்து அதன் பொறுப்பை அங்கீகரித்த அரசு, அதற்கான போக்குவரத்து மற்றும் உணவுக்காக ரூ.100 கோடி வரை செலவழித்தது. பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி ரயில்வே அமைச்சகம் அளிக்கிறது. இவையெல்லாம் செய்ய முடிந்த அரசுக்கு, இது போன்ற கடும் துயரமான நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணத்தை ஏன் அளிக்க முடியவில்லை?
இந்த பிரச்சினையை தொடக்கத்திலிருந்தே இந்திய தேசிய காங்கிரஸ் எழுப்பி வருகிறது. ஆனால், காங்கிரசின் கோரிக்கைகளை மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் முற்றிலும் புறக்கணித்து வருகிறது.
அதனால், ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஏற்க முடிவு செய்துள்ளது.
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
–Dr.DURAI BENJAMIN
ullatchithagaval@gmail.com
–Dr.DURAI BENJAMIN
ullatchithagaval@gmail.com
Great, hands up to Sonia Gandhi mam