கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு பதிவு!-முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.

து.இராமச்சந்திரன்.

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூரம்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் து.இராமச்சந்திரன், வயது 35, மாற்றுத் திறனாளியான இவர், 10 ரூபாய் இயக்கம் என்ற அமைப்பில் இணைந்து லஞ்சம், ஊழல் மற்றும் சட்ட விரோதமான செயல்களை தட்டிக் கேட்கும் விதத்தில் செயல்பட்டு வந்துள்ளார்.

சூரம்பட்டி ஊராட்சித் தலைவர் பெ.கோடி.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது, சூரம்பட்டி ஊராட்சித் தலைவர் பெ.கோடி, வயது 41 என்பவர், இரவு நேரத்தில் 6 நபர்களை காரில் ஏற்றிக்கொண்டு ஊரில் வலம் வந்துள்ளார். இதை து.இராமச்சந்திரன் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அந்த காரை பறிமுதல் செய்தனர்.

அதனால் ஆத்திரமடைந்த சூரம்பட்டி ஊராட்சித் தலைவர் பெ.கோடி, இராமச்சந்திரனை மிகவும் இழிவாக ஆபாச வார்த்தைகளால் பேசியதோடு, உன்னை இரண்டு நாட்களில் கொன்று விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத இராமச்சந்திரன், அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், முசிறி காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, முசிறி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, சூரம்பட்டி ஊராட்சித் தலைவர் பெ.கோடி மீது (Cr.NO : 869 –  IPC 341, 294-b, 506-1)  ஆகிய பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக கீழே பதிவு செய்துள்ளோம்.

பதவி, அதிகாரம் என்பது சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மக்களுக்கு சேவை செய்வதற்குதானே தவிர, யாரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல.

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் அன்றாட நடவடிக்கையை, தமிழக அரசு அதிகாரிகள் மூலம் உண்ணிப்பாக கவனித்து வருகிறது. அத்துமீறுனால் அது யாராக இருந்தாலும் அதற்கான தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN May 7, 2020 10:19 am

Leave a Reply