11127_2020_34_20_22217_Order_26-May-2020
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களைத் தவிர, அனைத்து தரப்பினரும் வேலை இழந்துள்ளனர். மேலும், சொந்தமாக தொழில் செய்யும் நபர்கள் அனைவரும் மிகப் பெரிய பொருளாதார இழப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் ஏற்கனவே வங்கி மற்றும் வங்கிசாரா தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கியிருந்த தனிநபர் கடன், தொழில் கடன், வாகனக் கடன் மற்றும் வீட்டு கடன் ஆகிய கடன்களுக்கான மாதாந்திர தவணைத் தொகையை செலுத்த இயலாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மாதாந்திர கடன் தவணைகளை செலுத்த முதலில் மூன்று மாதங்களும், ஊரடங்கு தொடர்ந்து 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேலும் மூன்று மாதங்களும், ஆகமொத்தம் 6 மாதங்கள் அவகாசம் அளித்து இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் உத்தரவிட்டன.
ஆனால், இந்த அவகாச காலத்தில் வட்டி கணக்கிடப்பட்டு கடன் தாரரின் கணக்கில் சேர்க்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, கடன் தவணை செலுத்த சலுகை அளித்து விட்டு, அக்காலத்திற்கான வட்டி வசூலிப்பது நியாயமற்றது; சட்ட விரோதமானது; கடன் தவணை காலத்தில் செலுத்தப்படாத வட்டியை கணக்கிடுவது கூட்டு வட்டி போன்றது. இதனால், செலுத்த வேண்டிய கடன் அதிகமாகும். அத்துடன் தவணைக் காலமும் அதிகரிக்கும். எனவே, கடன் தவணை சலுகைக் காலத்தில் வட்டி வசூலிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று (மே 26) உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு காணொளி காட்சியின் (Video Conference) வாயிலாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு, மத்திய அரசுக்கும் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
இதுகுறித்த முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
ITHU Kadan vangiya makkalukku, Central government seiyum periya dhrogam….
Ithai ettru kolla mudiyathu