மோடி அரசு அமைதியாக இருப்பதால் இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் அத்துமீறி ஆக்கிரமித்து வருகின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் இருக்க கூடாது.
லடாக் மற்றும் சிக்கிமில் மூன்று இந்திய நிலைகளின் மீது சீனப் படைகள் கடுமையான அத்துமீறல்களைச் செய்துள்ளன என்று பல செய்தி அறிக்கைகள் பிரதிபலிக்கின்றன. கால்வான் நதி பள்ளத்தாக்கு மற்றும் லடாக்கிலுள்ள பாங்கோங் த்சோ ஏரி பகுதியில். சீன இராணுவம் ஆயிரக்கணக்கான துருப்புக்களை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் உண்மை என்றால் மோடி அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com