தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘நிசர்கா’ புயல் இன்று பிற்பகல் மஹாராஷ்டிராவின் அலிபாக் அருகே கரையை கடக்கும் எனவும், அப்போது 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் மஹாராஷ்டிரா, குஜராத், டாமன் & டியூ, தாத்ரா & நாகர் ஹவேலி ஆகிய பிரதேசங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரண்டு நாட்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் படியும், கடும் புயல் தாக்க இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்படும் சூழல் உருவாகும் என்றும், இதனை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும், மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், மும்பையில் குடிசை பகுதியில் வசிப்பவர்கள், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழை, நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்தால் அதனை கையாள மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
IPPATHAN, AMPHAN Strom vanthuchu, ippa adaththatha, suddham……….. Mudiyala INDIA pavam….