பெருந்தலைவர் காமராஜர் 118-வது பிறந்தநாள்!-தமிழக முதலமைசர் கே.பழனிசாமி மற்றும் தலைவர்கள் புகழாரம்!- அமைச்சர்கள் மலர் அஞ்சலி.

kamarajar

இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்!-பெருந்தலைவர் காமராஜரை நினைவு கூர்ந்துள்ள ராகுல் காந்தி.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி தலைமையில் காமராஜரின் திருஉருவ சிலைக்கும், திருஉருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏழைகளுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கினார்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் ,காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ம தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தனது சென்னை அண்ணா நகர் இல்லத்தில் பெருந்தலைவர் காமராஜர் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எட்டாக்கனியாக இருந்த கல்வியை மதிய உணவு திட்டத்தால் எல்லோருக்கும் பந்திவைத்தவர், இந்நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட செய்த கலைஞருக்கும், காமராஜருக்கும் கொள்கை முரண் இருந்தாலும், குறிக்கோள் எல்லாம் சமத்துவமும், சமூகநீதியுமே. அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது உரிமையாய் இறுதி பணிகளாற்றிய பெருந்தலைவர், முதுமையிலும் மு.க.ஸ்டாலின் திருமணம் வந்து வாழ்த்தியவர். சமூகநீதிக்காக பெரியார், அண்ணா, கலைஞர் ஓரணியில் நின்று சமர்செய்ய, காமராஜரோ அப்போரை தன் அணிக்குள்ளேயே தொடங்கினார். கல்வி தந்தவரை போற்றுவோம்.

இவ்வாறு தி.மு.க தலைமை பெருந்தலைவர் காமராஜர் பற்றி நினைவு கூர்ந்துள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் ,அரியலூரில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் மாவட்டம்,- திட்டக்குடியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமையகம் கமலாலயத்தில், மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் இல்லத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 ஆவது பிறந்தநாள் நடைப்பெற்றது.

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

செய்தி தொகுப்பு:– துரை திரவியம், திவாஹர், கே.பி சுகுமார், எஸ்.சதீஸ் சர்மா, ஏ.வி.அனுசியா, எஸ்.திவ்யா.

Leave a Reply