பயமறியா வாலிபர்கள்; பரிதவிக்கும் போலீசார்!-ஏற்காடு சுற்றுலா வந்த இளைஞர்களுக்கு அபராதம்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த வாலிபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடைவிதித்துள்ளது. ஆனால், சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தினசரி வந்து ஏற்காட்டை சுற்றி பார்த்து செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் மற்றும் ஏற்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு தலைமையில் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் போலிசார் ரோந்து சென்றனர்.

இதில், பகோடா பாயின்ட் எனும் இடத்தில் சேலம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த முருகன் மகன் முத்து (வயது 19), செல்வம் மகன் கார்த்திக் (வயது 17), கோவிந்தராஜ் மகன் பிரகதீஸ்வரன் (வயது 19), அயோத்தியாபட்டினம் முருகன் மகன் செல்வக்குமார் (வயது 18), சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முத்து மகன் நவீன் (வயது 28), குணசேகரன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 26), இளங்கே மகன் ஜனார்த்தனன் (வயது 26) ஆகியோருக்கு போலிசார் அபராதம் விதித்தனர்.

படித்த இளைஞர்கள் கூட சட்டத்தை மதிக்காமல் இப்படி அத்துமீறி நடந்து கொள்வது சமூக அக்கறையின்மையைதான் பிரதிபளிக்கிறது. ஊரடங்கு நடைமுறையில் இருக்கும், நோய் தொற்று பரவி வரும்இந்த பேரிடர் காலத்தில், தனது பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை கூட கண்காணிக்காத பெற்றோர்கள், உண்மையிலுமே கண்டிக்கத்தக்கவர்கள்.

நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN July 19, 2020 5:33 pm

Leave a Reply