கேரள மாநிலம் இதுவரை இதுபோன்ற மிக மோசமான ஆட்சியையும், ஊழல் மிகுந்த முதல்வரையும் பார்த்ததே இல்லை. உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் பினராயி விஜயன், இதுவரை கண்டிராத ஊழலை செய்துள்ளார். மிக உயர்ந்த ஊதியம் பெறும் உயர் பதவிகளுக்கு பின்கதவு வழியாக பணி நியமனங்களும் நடைபெற்றுள்ளன.
உடனடியாக பினராயி விஜயன், பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். நாட்டிலேயே கேரள மாநிலம் தற்போது அவமானகரமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. ஒரு முதல்வரின் செயலாளர், மூத்த ஐஏஎஸ் அதிகாரியே, என்ஐஏ (The National Investigation Agency (NIA) சோதனையின் கீழ் உள்ளார் என்றால், எவ்வாறு முதல்வர் தனது பதவியைத் தொடர முடியும். இவ்வாறு கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சபரிமலை விமான நிலையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட திட்டத்திலும் மிகப் பெரிய ஊழல் நடைப்பெற்றுள்ளதாகவும், சர்வதேச அளவில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உலக வங்கியின் கருப்பு பட்டியலில் உள்ள “லூயிஸ் பார் சி பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியுள்ளார்.
KERALA VIN INTHA NILAI ATHIRCHI AZHIKKIRATHU…..