ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள், இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன. அந்த விமானத்தை சுகோய் போர் விமானங்கள் அழைத்து வந்தன. தொடர்ந்து அந்த விமானங்கள்,ஹரியானா மாநிலம் அம்பாலா வந்தடைந்தன. அங்கு விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரபேல் விமானங்களை விமான படைத் தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார்.
ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்ததை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமஸ்கிருத மொழியில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்: தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய ஆசீர்வாதம் எதுவுமில்லை. தேசத்தைப் பாதுகாப்பது ஒரு நல்ல செயல். தேசத்தைப் பாதுகாப்பதே சிறந்த யாகம். இதைத் தாண்டி எதுவும் இல்லை. மகிமையுடன் வானத்தைத் தொட்ட விமானங்களை வரவேற்கிறேன் .
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டுள்ளார்.
Dr.DURAI BENJAMIN
ullatchithagaval@gmail.com