இராமர் கோயில் பூமி பூஜை விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு, சரயு நதிக் கரையில் அமைந்துள்ள அயோத்தி நகரம் மின் விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி. இராமரின் பிறந்த நாளான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கி நீராடுவது வழக்கம். இராமர் இந்த உலக வாழ்வை முடித்து கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில் இறங்கி தான் உயிர் துறந்தார் என நம்பப்படுகிறது.
இராம ஜென்ம பூமி இந்தியாவில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி மாநகரத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சரயு நதிகரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சமசுகிருதம், பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது. அயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும்.
அயோத்தி நகரம் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிலிருந்து 135 கிமீ தொலைவிலும், கான்பூரிலிருந்து 225 கிமீ தொலைவிலும், வாரணாசியிலிருந்து 203 கிமீ தொலைவிலும், அலகாபாத்திலிருந்து 167 கிமீ தொலைவிலும், புதுதில்லிருந்து 605 கிமீ தொலைவிலும், பாட்னாவிலிருந்து 402 கிமீ தொலைவிலும் உள்ளது.
சர்ச்சைக்குரிய பாபர் மசூதியும், இராம ஜென்மபூமியும் அயோத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் தலைஎழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதிய ஊர் இது. விஷ்ணுவின் அவதாரமான இராமர், இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது.
அவத் பிரதேசம், இஸ்லாமியர்களின் ஆட்சியில் அயோத்தி நவாப்புகள் ஆளுகையின் கீழ் 1722 முதல் 1948 வரை வந்தது. பாபரின் தளபதிகளில் ஒருவரால் இங்குள்ள பாபர் மசூதி கட்டப்பட்டது. அயோத்தியில் இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அவ்விடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக சங்கப் பரிவார் இயக்கங்களால் அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளானது. இதில் உச்சகட்டமாக அங்கிருந்த மசூதி சங்கப் பரிவார இயக்கங்களால் தகர்த்தெறியப்பட்டது. அயோத்தி பிரச்சினை தற்போது 2019-உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தீர்க்கப்பட்டு, அயோத்தியில் இராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி கட்ட வகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை அயோத்தி மாநகரத்தில் நாளை (ஆகஸ்ட் 5) நடைபெற இருக்கிறது.
அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்கவுள்ளார்!
அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்கவுள்ளார். இந்த விழாவுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோதி ஹனுமன் கோயிலில் தரிசனம் செய்து பூஜையில் பங்கேற்பார். பின்னர் அவர் ராமர் பிறந்த ஜன்மபூமிக்கு பயணம் செய்வார். அங்கு அவர் இராம பிரானை தரிசனம் செய்து அங்கு நடைபெறவுள்ள பூஜையில் பங்கேற்பார். பின்னர் அவர் ஒரு பாரிஜாத மரக்கன்றை நடுவார். பின்னர் பூமி பூஜையினை செய்வார்.
ராமர் ஜன்மபூமி கோவில்’ அடிக்கல் நடப்பட்டதைக் குறிக்கும் வகையில் பிரதமர் கல்வெட்டைத் திறந்து வைப்பார். மேலும், இது குறித்த நினைவு தபால் தலையையும் அவர் வெளியிடுவார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com
படங்கள்: யுடிஎல் செய்தி குழுவினர்.
Good…