பா.ஜ.க-வுக்கும் – பேஸ்புக் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு, இந்திய ஜனநாயகத்தை சீரழித்து வருகிறது!-காங்கிரஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு.

பாஜகவுக்கும் – பேஸ்புக் நிறுவனத்திற்கும் இடையே உள்ள தூய்மையற்ற தொடர்பு, இந்திய ஜனநாயகத்தை சீரழித்து வருவதாக, காங்கிரஸ் தலைமை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பில் இருந்தே பேஸ்புக் இந்திய நிறுவன அதிகாரிகள் பாஜகவுடன் இணைந்து அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகவும், 2019 மக்களவைத் தேர்தலில் அந்த உறவு மிகவும் வலுப்பெற்றதாகவும், பாஜக மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட பக்கங்களை பேஸ்புக் நிர்வாகம் நீக்குவதாகவும், காங்கிரஸ் தலைமை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply