முகக் கவசம் அவசியம்!- சமூக இடைவெளி கட்டாயம்!-பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது!-மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அவசர சட்டம்!-தமிழக ஆளுநர் அனுமதி.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

PR040920-2

தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பொது மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் வழிகாட்டு விதிமுறைளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

ஆனால் அரசு அறிவித்த விதிமுறைகளை தனிப்பட்ட நபர்கள் நிறுவனங்கள் கடைகள் பின்றாமல் நோய் பரவ காரணமாகி வருவதாக அரசுக்கு தகவல்கள் வரப்பெற்றுள்ளன.

இதை தடுக்க விதிகளை மீறுவதை குற்றமாக கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்க்கு பரிந்துரை செய்தது. அதை ஏற்று பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்ய அனுமதித்து அவசர சட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.

இந்த அவசர சட்டத்தின்படி கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது அதே இடத்தில் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபரம் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply