வேலைவாய்ப்பின்மை என்றால் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? நாட்டின் பொருளாதாரத்தை எதை வைத்து அளவீடு செய்கிறார்கள்?- கேள்விக்கு என்ன பதில்?

வாசகரின் கேள்வி:

வேலைவாய்ப்பின்மை என்றால் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

-எம்.வினாயக மூர்த்தி., புரசைவாக்கம், சென்னை.

ஆசிரியரின் பதில்:

வேலைவாய்ப்பின்மை என்பது, ஒரு நபர் வேலை செய்யத் தயாராகவும், விருப்பத்துடனும் இருந்து, அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அதனை “வேலைவாய்ப்பின்மை” என்று குறிப்பிடுகிறார்கள்.

வேலைவாய்ப்பில்லாத மற்றும் திடீரென வேலையிழந்த தனி நபர்கள், நிதிசார் கடமைகளைச் சந்திக்கத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மேலும், அன்றாட குடும்பச் செலவினங்களுக்காகவும், மாதாந்திர தவணை தொகையை கட்ட முடியாமலும் மற்றும் வசிக்கும் இடத்திற்கு வாடகை செலுத்த முடியாமலும், மிகப் பெரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் வாடகை வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் அவலமும் ஆங்காங்கே நடைப்பெற்று வருகிறது.

மேலும், வேலைவாய்ப்பின்மையால் போதிய சத்தான உணவை அவர்களால் சமைத்து உண்ண முடியவில்லை. இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை பொங்கி தின்பதற்கே ஒரு குடும்பத்திற்கு குறைந்தப்பட்சம் தினசரி 100 ரூபாய் செலவாகிறது. அந்த ரேஷன் அரிசி உணவு, குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், விழுங்குவதற்கு ஏற்றதாக இல்லை என்பதுதான், வெகுஜன மக்களின் நீண்ட கால குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு, நோய்க்கு ஆளாகும் சூழல் அதிகரித்து வருகிறது. இதனால் உடல் நலக்குறைவு, மன அழுத்தம் மற்றும் சுய-மதிப்பு இழத்தல் போன்றவை ஏற்பட்டு, மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நேர்மறை மனப்போக்கு உள்ளவர்கள் கூட, வேலையில்லாதவராக இருக்கும் சூழ்நிலையில், எதிர்மறை சிந்தனைக்கு உள்ளாகுகிறார்கள்.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால், நாட்டில் பட்டினி சாவுகள் மற்றும் தற்கொலைகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. மேலும், திருட்டு, வழிபறி மற்றும் ஆதாயக் கொலை… போன்ற குற்றச் சம்பவங்களும் அதிகரிக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் விழிப்பாக இருப்பது நல்லது.

வாசகரின் கேள்வி:

நாட்டின் பொருளாதாரத்தை எதை வைத்து அளவீடு செய்கிறார்கள்?

-கே.சுரேஷ் ., ஆர்.எம்.காலனி, திண்டுக்கல்.

ஆசிரியரின் பதில்:

நுகர்வோர் செலவு, வெளிநாட்டு நாணய பரிமாற்று விகிதம், உள்நாட்டு மொத்த உற்பத்தி, மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி, பங்குச் சந்தை, வட்டி விகிதங்கள், தேசிய கடன், விலையுயர்வு விகிதம், வேலைவாய்ப்பின்மை, வர்த்தகச் சமநிலை ஆகியவற்றைக் கொண்டு தேசத்தின் பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது.

மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டினரால் உற்பத்தி செய்யப்பட்ட பணிகள் (அல்லது) பண்டங்களின் மொத்த இறுதி சந்தை மதிப்பாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி போல ஒரு எல்லைக்குள் உள்ளவர்களை எல்லாம் கணக்கில் எடுப்பதில்லை, மாறாக எங்கிருந்தாலும் அந்நாட்டினரின்(வசிப்பவர் மற்றும் புலம்பெயர்ந்தவர்) உற்பத்தியைக் கணக்கில் எடுக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் ஈட்டிய லாபமும் இதில் சேர்க்கப்படும்.

ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும், பழையப் பொருட்கள் விற்பனையை கணக்கில் கொள்ளாது. ஒரு பொருள் நுகர்வோரை அடையும் முன், சந்தையில் பெறப்படும் இறுதி விலையை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, சில்லரை விற்பனை விலை, இடைத்தரகர் விற்பனை விலை, கொள்முதல் விலை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாது.

மொத்த தேசிய உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி – இறக்குமதி) + (வெளிநாட்டு வரவு – வெளிநாட்டு செலவு)

வெளிநாட்டு வரவு என்பது, நம் நாட்டினர் செய்த வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அவர்கள் பெற்ற வெளிநாட்டு ஊதியங்கள்.

வெளிநாட்டு செலவு என்பது, இந்நாட்டில் வெளிநாட்டினர் செய்த முதலீடுகள் மற்றும் அவர்கள் பெற்ற இந்நாட்டு ஊதியங்கள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, நம் நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்பட்ட (பண்டம்/பணி) மதிப்பாகும். அதாவது நம் நாட்டில் வெளிநட்டினார் செய்த உற்பத்தியும் இதில் சேரும்.

மொத்த தேசிய உற்பத்தி என்பது, நம் நாட்டினர் உற்பத்தி செய்த (பண்டம்/பணி) மதிப்பாகும். வெளிநாட்டில் நம் நாட்டினர் ஈட்டிய வருமானமும் இதில் சேரும்.

அடுத்து, பங்குச் சந்தை என்பது நிறுவனங்கள் தங்கள் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். இது பொதுச் சந்தையில் தொழில்களை பொதுவில் வியாபாரப்படுத்தவும், நிறுவனத்தின் உரிமத்துவ பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டுத் தொகையை பெறவும் வழிவகுக்கிறது. சந்தை வழங்கும் எளிதில் பணமாக்கும் முறை பங்குப் பத்திரங்களை விரைவாக எளிதாகவும் விற்க முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது. இது ரியல் எஸ்டேட் போன்று குறைவான பணமாக்கும் வாய்ப்பு கொண்டவற்றோடு ஒப்பிடுகையில், பங்குகளில் முதலீடு செய்வது ஒரு அட்டகாசமான அம்சம்.

பங்குகள் மற்றும் மற்ற சொத்துகளின் விலை பொருளாதார நடவடிக்கையின் மாற்றங்களின் முக்கிய பங்கு வகிக்கிறது, அதுவே சமூக நிலவரத்தின் தாக்கமாக (அல்லது) குறியீடாக இருக்கும் என்பதை வரலாறு காட்டியுள்ளது.

பங்குச் சந்தை அதிகரிக்கும் ஒரு பொருளாதாரத்தில் அது பொருளாதாரம் வளர்ந்து முன்னேறுவதைக் காட்டுகிறது. உண்மையில், பங்குச் சந்தை எப்போதும் ஒரு நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் வளர்ச்சியின் முதல்நிலைக் குறிப்பானாக கருதப்படுகிறது. உயரும் பங்கு விலைகள், உதாரணத்திற்கு, அவை அதிகரிக்கும் தொழில் முன்னேற்றம் மற்றும் பலவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். பங்கு விலைகள் வீட்டு வசதிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் போன்றவற்றை பாதிக்கிறது. அதனால், மத்திய வங்கிகள் பங்குச் சந்தையின் நடைமுறை மற்றும் செயல்பாட்டின் மீது ஒரு கண் வைத்து, பொதுவாக பொருளாதார அமைப்புச் செயல்பாடுகளின் சுமூகமான இயக்கத்தில் கருத்தாய் இருப்பதுண்டு. பொருளாதார நிலைத்தன்மை என்பது மத்திய வங்கிகளின் நீடித்து இருத்தலைக் குறிக்கிறது.

பங்குச் சந்தைகள் ஒவ்வொரு பரிமாற்றத்தின் வெளியேற்றிடமாகவும் செயல்படுகின்றன, அதாவது அவை பங்குகளை வாங்கி வெளியிட்டு, ஒரு பாதுகாப்பு பத்திரத்தை விற்பவருக்கு பணத்துக்கான உத்தரவாதத்தையும் அளிக்கின்றன. இது ஒரு தனி நபராக வாங்குபவருக்கு (அல்லது) விற்பவருக்கு உள்ள ஆபத்தை அகற்றுகிறது, அதனால் அதற்கு ஒத்த நிலையுள்ளவர் அதற்குரிய பரிமாற்றத்தில் நிலைத்திருக்கலாம்.

இந்தச் செயல்களின் சுமூகமான செயல்பாடு பொருளாதார வளர்ச்சியை குறைந்த செலவில் ஏற்படுத்தி நிறுவனத்தின் முயற்சிகள் சரக்குகள், சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும். இப்படியாக பொருளாதார அமைப்பு செழிப்படைய உதவுகிறது.

பங்குச் சந்தைகள் உட்பட நவீன பொருளாதார சந்தைகளில் முக்கியமான கருத்தாக இருப்பது, சுதந்திரமாக தீர்மானிப்பது தான். உதாரணத்திற்கு, எல்லா துறையிலும் அமெரிக்க பங்குச் சந்தைகள் அதிகமாக சிறிய சந்தைகளை விட கட்டுப்படுத்தாத ஏற்புத்தனையை சந்திக்கின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்க சமுதாயத்துடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய (அல்லது) மதிப்பே அல்லாத சீன நிறுவனங்கள் வால் ஸ்ட்ரீட்டில் அமெரிக்க வங்கிகளுக்கு லாபமீட்டித் தருகின்றன, அவை இருந்த இடத்தில் பெரும் கமிஷன்களைப் பெற்றுத் தருவதோடு, சீனாவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களையும் பெறுகின்றன. இந்த நிறுவனங்கள் அமெரிக்க பொருளாதாரத்துக்கு எந்த விதத்திலும் நீண்ட கால நிலைத்தன்மையை வழங்கப் போவதில்லை என்றாலும், அமெரிக்க தொழிலதிபர்களுக்கு மற்றும் சீனர்களுக்கு குறைந்த கால லாபங்களை பெற்றுத் தருகின்றன. புதிய சந்தையில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் வந்தாலும், அது சந்தையின் குடிமக்களுக்குத் தான் நன்மை புரியும்.

தலைகீழாக, கனடாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையான டொரண்டோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் மிகக் குறைவுதான். இந்த சுதந்திர சிந்தனை கனடாவை உலக பொருளாதாரச் சூழல்களில் இருந்து கொஞ்சம் தவிர்த்துவிட்டது. பங்குச் சந்தைகள் மிகக் குறைந்த செலவில் பொருளாதார வளர்ச்சியை பெறவும், நல்ல வேலைவாய்ப்பை அடையவும், வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் உள்ளே வரும்படி சிறப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

வணக்கத்திற்குரிய வாசகர்களுக்கு, ஒரு அன்பான வேண்டுகோள்..!

“கேள்விக்கு என்ன பதில்? “-என்ற தலைப்பில், நமது வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ஊடகத்துறையில் 34 ஆண்டுகளுக்கு மேல் அனுபம் பெற்ற, நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்த, நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர், டாக்டர்.துரைபெஞ்சமின் அவர்கள், வெளிப்படையாகவும், உண்மையாகவும் பதில் அளிக்க இருக்கிறார். எனவே, மக்களின் மனநிலையை பிரதிபளிக்கும் வகையில், கருத்து ஆழமிக்க கேள்விகளை, கீழ்காணும் மின்னஞ்சல் ullatchithagaval@gmail.com (அல்லது) வாட்ஸ் அப் 9842414040 எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். வாசகர்கள் விரும்பினால் அவர்களின் படத்தையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.

-UTL MEDIA TEAM.

Leave a Reply