ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க “ஸ்மார்ட்போன் ” இல்லாததால், சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு சென்ற ஏழை மாணவனுக்கு, நடிகர் உதயநிதி மடிக்கணினி மற்றும் டேட்டா-கார்டை வழங்கினார்.

சென்னை, கொடுங்கையூரை சேர்ந்த சாமுவேல் என்ற மாணவர் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு ஸ்மார்ட்போன் வாங்க சாக்கடையைச் சுத்தம் செய்து கொண்டிருந்ததாகச் செய்தி வந்தது. இச்செய்தியைத் தொடர்ந்து தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி அந்த மாணவரின் கல்விக்காக மடிக்கணினி மற்றும் டேட்டா-கார்டை வழங்கினார்.

-கே.பி சுகுமார்.

Leave a Reply